உலக செய்திகள்
பாகிஸ்தானின் சுப்ரீம் கோர்ட்டில் 2 திருநங்கைகளுக்கு பணி வழங்கப்படும்; தலைமை நீதிபதி

பாகிஸ்தானின் சுப்ரீம் கோர்ட்டில் 2 திருநங்கைகளுக்கு பணி வழங்கப்பட உள்ளது என தலைமை நீதிபதி கூறினார்.
இஸ்லாமாபாத்,பாகிஸ்தான் நாடு கடந்த 2009ம் ஆண்டு திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர் என சட்டப்பூர்வ முறையில் அங்கீகரித்தது.  அவர்கள் அடையாள அட்டைகள் பெறவும் அனுமதி வழங்கியது.  கடந்த வருடம் முதன்முறையாக திருநங்கைகள் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் எடுத்து கொள்ளப்பட்டனர்.அந்நாட்டில் பல்வேறு ஆய்வுகளின்படி குறைந்தது 5 லட்சம் திருநங்கைகள் உள்ளனர் என தெரிய வந்துள்ளது.  அந்நாடு பிற நாடுகளை விட, திருநங்கைகளுக்கு சிறந்த உரிமைகள் கிடைக்க செய்வதற்கான சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.இந்த நிலையில் பாகிஸ்தானின் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சாகிப் நிசார் கூறும்பொழுது, இரண்டு திருநங்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டில் பணி வழங்கப்படும் என கூறியுள்ளார்.அவர், திருநங்கைகளை சமூக வாழ்விற்கு கொண்டு வர நீதிமன்றம் விரும்புகிறது.  அவர்களின் பிரச்னைகளை தீர்க்க விரும்புகிறது.  நம்முடைய சமூகத்தில் திருநங்கைகள் கேலிக்கு ஆளாகும் நிலையில் உள்ளனர்.அவர்ளுக்கான உரிமைகளை நாம் வழங்குவது என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார்.