நியாயமான இழப்பீடு

கலிபோர்னியாவின் சான் டிகோ நகரில் உள்ள நடைபாதையில் முன்னாள் மேயரின் மனைவியான 70 வயது சிந்தியா ஹெட்ஜ்காக், 2015-ம் ஆண்டு ஜூலை 31 அன்று ஒரு கையில் போனும் இன்னொரு கையில் பையுமாக நடந்து வந்தார்.

Update: 2018-09-14 05:00 GMT
சிந்தியா ஹெட்ஜ்காக் அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி, கீழே விழுந்தார். இரண்டு கைகளிலும் பொருட்கள் இருந்ததால் அவரால் விழும்போது கைகளை ஊன்றி, தப்பிக்க இயலவில்லை. அதனால் அவரது மார்பு தரையில் மோதியது. அதில் ஒரு மார்பகம் மோசமாகப் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது.

“நான் ஓடவில்லை. உயரமான குதிகால் செருப்புகளையும் அணியவில்லை. நடைபாதையில்தான் ஏதோ பிரச்சினை. இல்லாவிட்டால் விழுந்திருக்க மாட்டேன். சுமார் 13 லட்சம் ரூபாய் செலவு செய்து, மீண்டிருக்கிறேன். அதனால் நகர நிர்வாகம் மீது வழக்கு தொடுத்தேன். கடந்த ஆகஸ்டு மாதம் என்னுடைய உடல் வலிக்கும், மன வலிக்கும் ஆறுதல் தரும் வகையில் சுமார் 55 லட்சம் ரூபாய் எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வந்திருக்கிறது” என்கிறார் சிந்தியா.

ஆனால் நகர நிர்வாகம், சிந்தியா விழுந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பே அவர் மார்பக அறுவை சிகிச்சைகளைச் செய்திருக்கிறார். கடந்த 2012-ம் ஆண்டு மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் புதிய மார்பகங்களைப் பெற்றிருக்கிறார். இது ஏமாற்று வேலை என்று எதிர்ப்பு தெரிவித்தது. நீதிமன்றம் இந்தக் கூற்றைக் கண்டித்ததோடு, நடைபாதைகளைச் செப்பனிடவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்