பாகிஸ்தானை நடத்த நம்மிடம் போதுமான அளவுக்கு நிதி இல்லை: இம்ரான் கான்

பாகிஸ்தானை நடத்த நம்மிடம் போதுமான அளவுக்கு நிதி இல்லை என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-15 05:36 GMT
இஸ்லமாபாத், 

பாகிஸ்தானில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற இம்ரான்கான், கூட்டணி கட்சிகளுடன் ஆதரவோடு பிரதமராக பதவியேற்றுள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றது முதல் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை இம்ரான்கான் மேற்கொண்டுள்ளார். 

இந்த சூழலில், பாகிஸ்தான் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், பாகிஸ்தான் நாட்டை நடத்த நம்மிடம் பணம் இல்லை என்று தெரிவித்தார். இம்ரான்கான் மேலும் பேசுகையில் கூறியதாவது:- “ வளமான திட்டங்களை மேற்கொள்வதற்கு பதிலாக இழப்பு ஏற்படுத்தும் திட்டங்களை முந்தைய அரசாங்கங்கள் செயல்படுத்தின. 

அதேபோல், நாட்டு மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் வேலை தேடும் இளைஞர்களாகவே உள்ளனர். கடனில் இருந்து அரசு மீண்டு வருவது அவசியமாகும். 

நம்மையும் நமது நாட்டையும் மாற்ற வேண்டியது அவசியமாகிறது.  நாட்டை நாம் மாற்ற வேண்டும் என்பதற்காக கடவுள் இத்தகைய சூழலை கொடுத்து இருக்கலாம். அரசியல் அழுத்தங்கள் இன்றி அதிகாரிகள் செயல்படுவதை எனது அரசு அனுமதிக்கும்” இவ்வாறு பேசியதாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்