73 ஆயிரம் ஆண்டுகள் முந்திய ஓவியம் கண்டுபிடிப்பு

73 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியம் பொறிக்கப்பட்ட சிறு பாறைத் துண்டொன்றை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர்.

Update: 2018-09-15 10:42 GMT
தென்னாப்பிரிக்காவில்  73,000 வருடங்கள் பழமை வாய்ந்த  ஓவியம் பொறிக்கப்பட்ட சிறு பாறைத் துண்டொன்றை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர். குறுக்குக் கோடுகள் போன்று காணப்படும் இந்த ஓவியம்  சிவப்பு நிறக் காவி கொண்டு வரையப்பட்டுள்ளது.

சிலர் இது ஹேஸ்டேக் போன்ற வடிவில் காணப்படுவதாகக் கூறுகின்றனர். மேலதிக தகவல்களை பெறும் பொருட்டு இக்கல் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இதே சமயத்தில் தற்போதைய மனித இனமான ஹோமோ சேபியன் முதன்முதலில் ஆப்பிரிக்காவிலேயே தோன்றியிருந்ததாக கூறப்படுவது  குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்