மாற்று திறனாளி நடனக் கலைஞர்; பாரீசில் இரண்டு இடங்களில் நடனம் ஆட அனுமதி மறுப்பு

மாற்று திறனாளி நடனக் கலைஞர் பாரீசில் இரண்டு இடங்களில் நடனம் ஆட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-09-24 11:10 GMT


ஒரு காலை இழந்தும் நடனமாடும் ரோயா ஹாசினி என்னும் நடனக் கலைஞருக்கு பாரீஸின் இரண்டு இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ரோயாவுக்கு ஈபிள் கோபுரம் மற்றும் கேட்டகாம்ஸ்  ஆகிய இரண்டு சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடனக் கலைஞரான ரோயா, ஒரு காலை இழந்தும் நடனம் மீதான ஆர்வத்தால் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று நடனம் ஆடி வருகிறார். அவர் பிரான்ஸ் சென்றிருந்தபோது ஈபிள் கோபுரம் மற்றும் கேட்டகாம்ஸ் ஆகிய இடங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை அனுமதிக்க முடியாது என பாதுகாவலர்கள் மறுத்துவிட்டனர்.

ஈபிள் கோபுரம் மிகவும் குறுகலானது மட்டுமல்ல அவர் மிகவும் மெதுவாக செல்வதால் அவருக்கு பின்னால் வருபவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அவரை கேட்டகாம்சுக்குள் அனுமதிப்பது, கண் பார்வையற்ற ஒருவரை விமானம் ஓட்ட அனுமதிப்பதற்கு சமம் என்றும் ஒரு பாதுகாவலர் கூறியிருந்தார். 

பாதுகாப்பு குறித்த காரணங்களை தான் புரிந்துகொள்வதாக தெரிவித்துள்ள ரோயா, குறைபாடுடையவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

கேட்டகாம்ஸ் செய்தி தொடர்பாளர் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இனி இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஈபிள் கோபுர தரப்பு சம்பவம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


மேலும் செய்திகள்