பாபர் கல்சா இயக்கத்தால் அமெரிக்காவுக்கு ஆபத்து வெள்ளை மாளிகை அறிவிப்பு

இந்தியாவில் சீக்கியர்களுக்காக தனிநாடு (காலிஸ்தான்) கேட்டு போராடி வரும் ‘பாபர் கல்சா’ பயங்கரவாத இயக்கத்துக்கு இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் தடை விதித்து உள்ளன.

Update: 2018-10-05 23:45 GMT

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் பாபர் கல்சா இயக்கம் தங்கள் நாட்டிலும் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்று நேற்று பகிரங்கமாக அறிவித்தது.

இதுபற்றி வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘பாபர் கல்சா இயக்கம் இந்தியாவில் மட்டுமின்றி வேறு நாடுகளிலும் அப்பாவி மக்களை குறி வைத்து பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ளலாம். அமெரிக்காவின் நலன்களை பாதிக்கும் விதமாக இதுபோன்ற தாக்குதல்களில் அந்த இயக்கம் அமெரிக்கர்கள் மீதும் நடத்த வாய்ப்பு உள்ளது. மிகப்பெரிய பொருளாதாரம், அரசியல், சமூக நாடுகளை குறி வைத்தும் பாபர் கல்சா அமைப்பு வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபடலாம்’’ என்று கூறப்பட்டு உள்ளது.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பாபர் கல்சா இயக்கம், அமெரிக்காவை தங்களுடைய தளமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக அண்மையில் இந்திய அரசு டிரம்ப் நிர்வாகத்திடம் முறையிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்தே இந்த அறிவிப்பை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

இதேபோல் நோர்டிக் ரெசிஸ்டன்ஸ் மூவ்மெண்ட், நியோ–நாஜி நே‌ஷனல் ஆக்சன் குரூப் ஆகிய பயங்கரவாத குழுக்களாலும் தங்கள் நாட்டுக்கு ஆபத்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்து இருக்கிறது.

மேலும் செய்திகள்