வங்காளதேச பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வீசிய வழக்கு: 19 பேருக்கு மரண தண்டனை, 19 பேருக்கு ஆயுள்

வங்காளதேச பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வீசிய வழக்கில் 19 பேருக்கு மரண தண்டனையும் 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-10-10 07:32 GMT
டாக்கா, 

வங்காளதேசத்தின் தற்போதைய பிரதமர் ஷேக்ஹசீனாவின் அவாமிலீக் கட்சி கடந்த 2004-ம் ஆண்டு டாக்காவில் பேரணி நடத்தியது. அதில், அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷேக் ஹசீனா உட்பட அவரது கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

அப்போது இந்த பேரணியில் வந்தவர்கள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஷேக் ஹசீனா பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். ஆனால் அதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 500 பேர் காயம் அடைந்தனர். அது தொடர்பான வழக்கு வங்காளதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் மேற்கூறிய வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் 19 பேருக்கு மரண தண்டனையும் 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரில் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீத ஜியாவின் மகன் தரிக் ரகுமானும் ஒருவர் ஆவார். அதேபோல், இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முன்னாள் மந்திரி லுட்ஃபோஸ்மன் பாபரும் ஒருவர் ஆவார்.  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரகுமான் தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். 

மேலும் செய்திகள்