உலகைச் சுற்றி...

சோமாலியாவில் பைடோவா என்ற இடத்தில் 2 தற்கொலைப்படை தாக்குதல்கள் நடந்தன.

Update: 2018-10-14 22:45 GMT

* துருக்கி நாட்டில் அகதிகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். அவர்கள் எந்த நாட்டினர் என்பது உடனடியாக தெரியவரவில்லை.

* பாகிஸ்தானின் கராச்சி நகரில் முகமது ரஷீத் என்ற ஆட்டோ டிரைவரின் வங்கிக்கணக்கில் ரூ.300 கோடி பண பரிமாற்றங்கள் நடந்துள்ளது. இதுகுறித்து அவரை அழைத்து மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது. அவர் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறி விட்டார். அவர், “ என் வாழ்நாளில் நான் ரூ.1 லட்சத்தைக்கூட பார்த்தது இல்லை. அப்படி இருக்கையில் என் வங்கிக்கணக்கில் ரூ.300 கோடி என்பது கனவு போல இருக்கிறது” என்று கூறினார்.

* சோமாலியாவில் பைடோவா என்ற இடத்தில் நேற்று அடுத்தடுத்து 2 தற்கொலைப்படை தாக்குதல்கள் நடந்தன. இவற்றில் 20 பேர் பலியாகினர். 50 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு அல் சபாப் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.

* அமெரிக்காவினுள் யாரும் சட்ட விரோதமாக ஊடுருவுவதைவிட தகுதியின் அடிப்படையில் நுழைவதைத்தான் நான் விரும்புகிறேன் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கூறி உள்ளார்.

* சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் தொடர்பாக பெற்ற கடன்கள் குறித்து சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பிடம் விவரங்களை தெரிவிக்க தயார் என பாகிஸ்தான் நிதி மந்திரி ஆசாத் உமர் கூறினார்.


மேலும் செய்திகள்