"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு

நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் என்று 129 வயது பாட்டி மன வேதனையுடன் கூறியுள்ளார்.

Update: 2018-10-15 10:58 GMT
மாஸ்கோ,

ரஷ்யாவை சேர்ந்த கோபு என்ற பெண்மணி 1889 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். 129 வயதாகும் இவர் உலகின் மிக வயதான பெண்மணி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் கோபு இரண்டாம் உலகப்போரின் போது தான் ரஷ்யாவிலிருந்து வெளியேறி தலைமறைவாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும் நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுக்கும் தண்டனை தான் என அந்த பாட்டி கூறியுள்ளார். என் வாழ்க்கையில் ஒரு சந்தோஷமான நாள் என்றால், நான் முதலில் என் வீட்டிற்குள் நுழைந்த நாள் தான்.

உலகிலேயே மிகவும் வயதான பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டை சார்ந்த ஜெனனி காலெம்ட். இவர் தான் உலகின் மிக நீண்ட  நாள்  வாழ்ந்தவர் ஆவார். இவர் 1997-ம் ஆண்டு 122 வயதில் இறந்தார்.

மேலும் செய்திகள்