உலகைச் சுற்றி....

* பிரேசில் அதிபர் மிச்செல் டெமர் மீது சட்ட விரோத பண பரிமாற்ற தடை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Update: 2018-10-17 23:00 GMT
* அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்சுக்கு இலக்கியத்துக்கான உயர்ந்த விருதான இங்கிலாந்து நாட்டின் ‘புக்கர் பரிசு’ அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய ‘பால்காரர்’ என்ற நாவலுக்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது

* சோமாலியா நாட்டில் அமெரிக்கா நேற்று முன்தினம் வான்தாக்குதல் நடத்தியது. இதில் அல் சபாப் பயங்கரவாதிகள் 60 பேர் கொல்லப்பட்டனர்.

* நவம்பர் 6–ந் தேதி நடக்க உள்ள அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிற இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோகன்னா, பிரமிளா ஜெயபால், அமி பெரா உள்ளிட்ட 12 பேர் 26 மில்லியன் டாலர் (சுமார் ரூ.192 கோடி) தேர்தல் நிதி திரட்டி உள்ளனர்.

* சவுதி மன்னராட்சியைப் பற்றி கடுமையாக விமர்சித்து வந்து, துருக்கியில் இஸ்தான்புல் சவுதி அரேபிய துணை தூதரகத்தில் காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59) சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என துருக்கி நாளிதழ் ‘யெனி சமாக்’ கூறி உள்ளது. அவரை கொன்ற பின்னர் அவரது உடல் சிதைக்கப்பட்டுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்