உலகைச் சுற்றி....

* வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு விரைவில் தென் கொரியாவுக்கு வருவார் என்று அந்த நாட்டின் அதிபர் மூன் ஜே இன் அறிவித்துள்ளார்.

Update: 2018-11-01 23:00 GMT
* பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டுள்ள ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதன் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறி விடும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு கனடா உள்ளிட்ட பல நாடுகள் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளன.

* உயர் மட்ட அதிகார வர்க்கத்தில் இருந்து உத்தரவுகள் வராமல், துருக்கியில் இஸ்தான்புல் சவுதி துணை தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்டிருக்க முடியாது என்று துருக்கி ஆளும் கட்சி கூறி உள்ளது.

* உலகமெங்கும் 2006–2017 வரையிலான காலகட்டத் தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பணியின்போது கொல்லப்பட்டுள்ளனர்; இது 4 நாட்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் நடந்துள்ளது. இந்த தகவலை யுனெஸ்கோ (ஐ.நா. கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு) வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்