தலிபான்களின் ராஜகுரு மவுலானா சமி உல் ஹக் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் ராஜகுருவான மவுலானா சமி உல்-ஹக் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2018-11-02 16:04 GMT



பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டுவரும் தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் ராஜகுருவாக இருந்த மவுலானா சமி உல்-ஹக் கொல்லப்பட்டார் என பாகிஸ்தான் மீடியாக்களில் தகவல் வெளியாகியுள்ளது. வீட்டிலிருந்த போது மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டார் எனவும் கத்தியால் குத்தி கொன்றுவிட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருடைய இறப்பை உறவினர்கள் உறுதிசெய்துள்ளனர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்