உலகைச் சுற்றி....

* ஈரான் தங்கள் வான்தாக்குதல் தகுதித்திறன்களை மேம்படுத்துவதற்கு ஏற்ற வகையில், ‘4–ம் தலைமுறை இடைமறிப்பு ஜெட்’ ரக போர் விமானங்களை கூடுதலாக தயாரிக்க தொடங்கி உள்ளது.

Update: 2018-11-03 23:00 GMT
* ஆப்கானிஸ்தான் நாட்டில் நங்கர்ஹார் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 18 தலீபான் பயங்கரவாதிகளும், 3 ஐ.எஸ். பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர்.

* பாகிஸ்தானில் தெய்வநிந்தனை வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்து இருப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், ஆசியா பீவி தரப்பில் கோர்ட்டில் ஆஜரான வக்கீல் சைபுல் மாலூக் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். தனது குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் அரசு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

* எகிப்து நாட்டின் மின்யா மாகாணத்தில் கிறிஸ்தவர்கள் பயணம் செய்த பஸ்சை குறி வைத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 7 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

* அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுகிறவர்களால் வரி செலுத்துகிறவர்களுக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7 லட்சத்து 40 ஆயிரம்கோடி) செலவு ஆகிறது என்று ஜனாதிபதி டிரம்ப் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்