சீனாவின் வடமேற்கே நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு

சீனாவின் வடமேற்கே இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2018-11-04 03:50 GMT
பெய்ஜிங்,

சீனாவின் வடமேற்கே கிஜில்சு கிர்கீஸ் பகுதியில் இன்று காலை 5.36 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 22 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் பிற சேதங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்