உலகைச் சுற்றி

ஆப்கானிஸ்தானில் டாக்கார் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2018-11-08 22:45 GMT

* பாகிஸ்தானில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் தயாரிக்கப்பட்ட டி.டி.எச். சாதனங்கள் (தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண உதவும்) ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.7 கோடியே 83 லட்சம் ஆகும்.

* ஆப்கானிஸ்தானில் டாக்கார் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். ராணுவ வீரர்கள் நடத்திய எதிர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 20 பேர் பலியாகி உள்ளதாக போலீஸ் தலைவர் அப்துல் ரஷீத் பஷீர் தெரிவித்தார்.

* பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு கோர்ட்டில் நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான சாட்சி ஒருவர், நவாஸ் ஷெரீப்பின் மகன் ஹசன் நவாசின் 18 நிறுவனங்கள் பெயரில் 17 சொகுசு வீடுகளும், சொத்துகளும் உள்ளதாக சாட்சியம் அளித்தார்.

* தஜிகிஸ்தான் நாட்டில் குஜாந்த் நகர சிறையில் ஏற்பட்ட மோதலில் 20 கைதிகளும், 2 காவலர்களும் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்