ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி

ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2018-11-12 09:09 GMT
ஹொடெய்டா,

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை கட்டுக்குள் கொண்டு வர வான்வழி தாக்குதல் நடந்து வருகிறது.  அரசுக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஏமன் நாட்டில் அரசு விசுவாசிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அரசு ஆதரவு கூட்டணி படையினர் வான்வழியே நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 149 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  அவர்களில் 7 பேர் பொதுமக்கள்.  110 பேர் கிளர்ச்சியாளர்கள்.  அரசு ஆதரவு விசுவாசிகள் 32 பேரும் இந்த தாக்குதலில் பலியாகினர்.  பிற விவரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்