உலகைச் சுற்றி....

* சவுதி அரேபியாவுக்கான அமெரிக்க தூதராக ஜான் அபிஜைத் என்பவரை ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

Update: 2018-11-14 23:00 GMT
* அமெரிக்காவில் புகழ் பெற்ற ஓவியர் எட்வர்ட் ஹோப்பர் தீட்டிய ஓவியம் ஒன்று, நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டது. இந்த ஓவியம் 92 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.27 கோடியே 60 லட்சம்) விற்பனையானது. இது 1929–ல் வரையப்பட்டதாகும்.

* ஆப்கானிஸ்தானில் நிம்ரோஜ் மாகாணத்தில் உள்ள கமால் கான் அணை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது தலீபான் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 12 காவலர்கள் பலியாகினர். எதிர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார்.

* பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு கோர்ட்டில், ‘அல் அஜிஜியா’ என்னும் ஊழல் வழக்கில் நேற்று நேரில் ஆஜரானார். நீதிபதி முகமது அர்ஷாத் மாலிக் எழுப்பிய 50 கேள்விகளில் 45 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

* அமெரிக்காவில் 9.3 மில்லியன் டாலர் (சுமார் ரூ.67 கோடியே 89 லட்சம்) அடமான மோசடி வழக்கில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். சுர்ஜித் சிங் என்பவருக்கு 11 ஆண்டு, அவரது மகன் ராஜேஷ்வர் சிங்குக்கு 11 ஆண்டு, அனிதா சர்மா என்ற பெண்ணுக்கு 3¾ ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்