ஆப்கானிஸ்தானில் 24 மணி நேரத்தில் தலீபான் பயங்கரவாதிகள் 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் 24 மணி நேரத்தில் தலீபான் பயங்கரவாதிகள் 20 பேர் பலியானார்கள். மற்றொரு தாக்குதலில் 30 போலீசார் உயிரிழந்தனர்.

Update: 2018-11-15 23:15 GMT
கஜினி,

மாஸ்கோவில் ரஷிய நாட்டின் ஏற்பாட்டில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் தலீபான் பயங்கரவாதிகள் ஒரு பக்கம் கலந்து கொண்டாலும் அவர்கள் பயங்கரவாதத்தை கைவிடவில்லை. அங்கு தொடர்ந்து பாதுகாப்பு படையினருடனும், போலீசாருடனும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கஜினி மாகாணத்தின் ஆண்டார், காராபாக் மாவட்டங்களில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிகளை குறி வைத்து ஆப்கானிஸ்தான் போர் விமானங்கள் நேற்று முன்தினம் முதல் கடுமையான குண்டுவீச்சில் ஈடுபட்டன. இதில் கடந்த 24 மணி நேரத்தில், 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தலீபான்களின் பதுங்கு குழிகளும், ஆயுதக்கிடங்குகளும் அழிக்கப்பட்டன. இதற்கு இடையே பராக் மாகாணத்தில் காகி சபெத் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனைசாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த எதிர்பாராத தாக்குதலால் போலீஸ் படையினர் 30 பேர் உயிரிழந்தனர். ஏராளமான ஆயுதங்களையும் தலீபான் பயங்கரவாதிகள் அங்கிருந்து அள்ளிச்சென்று விட்டனர். 

மேலும் செய்திகள்