எல்லையில் அமைதி நிலவ இந்தியா-சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் எல்லையில் சிக்கிம் மாநிலத்தில் டோக்லாம் என்ற இடம் அமைந்துள்ளது.

Update: 2018-11-16 00:00 GMT

பீஜிங்,

டோக்லாம் பகுதியை சீன வீரர்கள் ஆக்கிரமிப்பு செய்ததுடன், அங்கு சாலை அமைக்கவும் கடந்த ஆண்டு நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இரு நாட்டு படைகளும் அங்கு குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங்குடன் ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் எல்லையில் இருந்து இரு நாட்டு படைகளும் விலக்கி கொள்ளப்பட்டன.

இந்நிலையில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை சிக்கிம் எல்லையில் நடைபெற்றது. அப்போது எல்லையில் அமைதி நிலவ இரு நாட்டு அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்கவும், இருதரப்பு உறவை மேம்படுத்துவும் ஒப்புதல் அளித்தனர். 9/வது ஆண்டாக இந்த பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த ஆண்டு எல்லையில் பதற்றம் நிலவியதால் இந்த பேச்சுவார்தை நடைபெறவில்லை. அடுத்த ஆண்டும் பேச்சுவார்த்தை நடத்த இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர்.

மேலும் செய்திகள்