பத்திரிகையாளர் கசோக்கியை துண்டு துண்டாக்கிய ஆயுதங்கள் துருக்கி பத்திரிகை தகவல்

பத்திரிகையாளர் கசோக்கியை துண்டு துண்டாக்கிய ஆயுதங்கள் குறித்து துருக்கி பத்திரிகை தகவல் வெளியிட்டு உள்ளது.

Update: 2018-11-16 07:32 GMT
இஸ்தான்புல்

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்ட பத்திரிகையாளர்  குறித்து முக்கிய தகவலை துருக்கி பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. சவுதி பத்திரிகையாளர் கசோகி கொலையில் சம்பவத்தன்று பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்த பட்டியலை துருக்கி பத்திரிகை தற்போது வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர் கசோக்கியை கொல்ல சவுதி வாடகை கொலைகாரர்கள் மின்சாரத்தால் செயல்படும் கருவிகள், கத்தரிக்கோல் மற்றும் மருத்துவர்கள் பயன்படுத்தும் கூரான கத்திகள் என பயன்படுத்தியதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கசோக்கியை கொலை செய்த பின்னர் சவுதி அரேபியாவின் அந்த 15 பேர் குழு துருக்கியில் இருந்து தப்பியபோது விமான நிலையத்தில் அவர்களின் பெட்டிகளை ஸ்கேன் செய்ததில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கசோக்கி கொலையானது திட்டமிடப்பட்டு நடந்ததாகவும், விபத்து அல்ல எனவும் அம்பலமாகியுள்ளது.

மேலும் செய்திகள்