உலகைச் சுற்றி...

* நைஜீரியாவில் கெப்பி மாகாணத்தில் நடந்த தீ விபத்தில் ஒரு தாயும், அவரது 4 குழந்தைகளும் சிக்கி உயிரிழந்தனர்.

Update: 2018-11-17 22:45 GMT
* துருக்கியில் இஸ்தான்புல் விமான நிலையத்தில் 2016–ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து, இஸ்தான்புல் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

* இந்தோனேசியாவில் சுவாவேசி மாகாணத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டு வந்த நில நடுக்கத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். 8 ஆயிரம் பேர் வீடுகளை காலி செய்து விட்டு, பாதுகாப்பு மையங்களை நாடிச்சென்றுள்ளனர்.

* அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1,011 ஆகி இருக்கிறது.


* வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஜனாதிபதி டிரம்புக்கும், சி.என்.என். டெலிவி‌ஷன் நிருபர் அகோஸ்டாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அகோஸ்டாவுக்கு வழங்கப்பட்ட ஊடக ’பாஸ்’ பறிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்குள்ள கோர்ட்டில் சி.என்.என். டெலிவி‌ஷன் முறையிட்டது. அதைத் தொடர்ந்து தற்காலிகமாக அவருக்கு ஊடக ‘பாஸ்’ வழங்குமாறு அந்த கோர்ட்டு உத்தரவிட்டது. அதை ஏற்று வெள்ளை மாளிகை அவருக்கு ஊடக ‘பாஸ்’ வழங்கப்படும் என கூறி உள்ளது.

மேலும் செய்திகள்