வங்காளதேசம்: பஸ் மீது ரெயில் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலி

வங்காளதேசத்தில் பஸ் மீது ரெயில் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

Update: 2018-11-28 18:00 GMT
டாக்கா,

வங்காளதேசத்தின் பெனி மாவட்டத்தில், ஷரிஷாடி என்னும் இடத்தில் ஆளில்லா ரெயில்வே கிராசிங் உள்ளது. சிட்டகாங்கில் இருந்து வரும் நசிராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று மாலை இந்த கிராசிங்கில் வேகமாக வந்து கொண்டிருந்தது.
 
அப்போது அந்த கிராசிங்கை கடக்க முயன்ற பஸ் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இந்த விபத்தில் இறந்தவர்களில் காஷி மன்சூர் அஹமது(28) என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.
 

மேலும் செய்திகள்