அர்ஜென்டினாவில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல்லுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் மோடி ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல்லை இன்று சந்தித்து பேசினார்.

Update: 2018-12-01 13:59 GMT
பியூனஸ் அயர்ஸ்,

அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடியை அர்ஜென்டினாவின் அதிபர் மவுரிசியோ மேக்ரி இன்று காலை வரவேற்றார்.  அதன்பின் பிரதமருக்கு தனது அலுவலக இல்லத்தில் காலை விருந்து கொடுத்த மேக்ரி அவருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில் விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல், விண்வெளி, ராணுவம், எண்ணெய் மற்றும் வாயு மற்றும் அணு சக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பு அளிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

அதன்பின்னர் பிரதமர் மோடி பியூனோஸ் அயர்ஸ் நகரில் உள்ள சென்டிரோ கோஸ்டா சாய்குவேரோ என்ற பகுதியில், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்டு டஸ்க், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாடு ஜங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல்லையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

மேலும் செய்திகள்