4,400 ஆண்டுகள் பழமையான எகிப்து ராஜ குருவின் கல்லறை கண்டுபிடிப்பு

4,400 ஆண்டுகள் பழமையான எகிப்து ராஜ குருவின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-12-16 23:15 GMT
கெய்ரோ,

எகிப்து நாட்டில் தலைநகர் கெய்ரோ அருகில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், புதைபொருள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.

இதில் 4 ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லறை, சக்காரா பிரமிட் வளாகம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்லறை, அங்கு வாழ்ந்து மறைந்த வாட்யே என்னும் அரச குருவுக்கு (ராஜ குருவுக்கு) உரியது என தெரியவந்துள்ளது. அந்தக் கல்லறையில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. பாரோ மன்னர்களின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், வாட்யே, தனது தாயார், மனைவி, பிற உறவினர்களுடன் காணப்படுகிற அலங்காரக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த கல்லறையை தோண்டிப்பார்க்கும் பணியை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி உள்ளனர்.

இதில் அரச குரு வாட்யேயின் உடல் வைத்து அடக்கம் செய்யப்பட்ட பூ வேலைகளைக் கொண்ட கல்லால் ஆன சவப்பெட்டி பற்றிய தகவல்கள், வாட்யேயின் எலும்புகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்