ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை நவாஸ் ஷெரீப் வேறு சிறைக்கு மாற்றம்

லண்டனில் முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2018-12-25 23:30 GMT

லாகூர்,

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் புதிய அரசு அமைந்ததும், கடந்த செப்டம்பர் மாதம் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அல்–அஜிசியா உருக்காலை தொடர்பான ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. அதனை தொடர்ந்து, உடனடியாக நவாஸ் ஷெரீப்பை கைது செய்த போலீசார் அவரை அடியாலா சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, தனது குடும்பத்தினர் மற்றும் தனக்கான தனிப்பட்ட மருத்துவர்கள் ஆகியோர் லாகூரில் இருப்பதால் தன்னுடைய தண்டனை காலத்தை லாகூரில் உள்ள கோட் லாக்பாட் சிறையில் கழிக்க அனுமதி கேட்டு நவாஸ் ஷெரீப் கோர்ட்டை நாடினார்.

அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு அதற்கு அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து நவாஸ் ஷெரீப் நேற்று லாகூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

மேலும் செய்திகள்