எகிப்து: பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கை - 40 பேர் சுட்டுக்கொலை

எகிப்து நாட்டில் பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் 40 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2018-12-29 17:15 GMT
கெய்ரோ,

எகிப்து நாட்டின் காசா மாகாணத்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்த தாக்குதலை தொடர்ந்து 40 பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்ப்பதற்காகவும், அங்கு நடைபெறும் ஒலி ஒளி நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காகவும் வியட்நாமைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு பேருந்தில் சென்றனர். அப்போது மரியோத்தியா என்ற பகுதி வழியாக பேருந்து சென்றபோது சாலையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.

இதில் பேருந்தில் இருந்த எகிப்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலா வழிகாட்டி உள்பட, வியட்நாமை சேர்ந்த மூன்றுபேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்நிலையில் கிசாவில் அதிகாலையில் நடத்தப்பட்ட இரு சோதனைகளில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், வடக்கு சினாய் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் எகிப்து நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்