அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-12 05:49 GMT
வாஷிங்டன்

கடந்த 21 நாட்களாக அமெரிக்காவின் அரசாங்கம் பகுதியளவு முடங்கியுள்ளது. இதனால், சுமார் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியம் பெறாமல் உள்ளனர்.

அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். "அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு எனக்கு எல்லா உரிமையும் உண்டு

எதிர்கட்சியினருக்கு ஆதரவாக ஊடகங்கள் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் ஏற்படும் உயிரிழப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஊடகங்கள் மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். தம்மை இழிவுப்படுத்தி, தேர்தல் வெற்றியை தேடும் எதிர்கட்சியினரை கண்டுகொள்ள போவதில்லை என்று தெரிவித்த டிரம்ப், அமெரிக்க - மெக்சிகோ எல்லை சுவருக்கான நிதியே நாட்டிற்கு முக்கியமானது என்றார். 

மேலும் செய்திகள்