நேபாளத்தில் நில அதிர்வு

நேபாளத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

Update: 2019-01-23 08:45 GMT
காத்மாண்டு, 

நேபாளத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள போஜ்பூர் மற்றும் அதன் அருகாமையில் உள்ள கோடாங் மாவட்டத்தில்  நில அதிர்வு உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி  10.30 மணியளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளத்தில் 12 மணி நேரத்தில் ஏற்படும் 2-வது நில அதிர்வு இதுவாகும். முன்னதாக, காத்மாண்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு 11.26 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது.  கடந்த 2015- ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகள் இவை என நேபாள புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

நேபாளத்தில், கடந்த 2015-ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், நேபாளம் நிலைகுலைந்தது. இந்த நிலநடுக்கத்துக்கு சுமார் 9 ஆயிரம் பேர் பலியாகினர். 22 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். காத்மாண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதம் அடைந்தன. 

மேலும் செய்திகள்