அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் : 8 இந்தியர்கள் கைது; 600 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் வாய்ப்பு

அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் நடத்திய 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர் . 600 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

Update: 2019-01-31 12:32 GMT
வாஷிங்டன்,

மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்கா சென்ற இந்தியர்கள் உள்ளிட்ட சுமார் 600 பேர் கைதாகவோ, நாடு கடத்தப்படவோ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் மாணவர்களுக்கான விசாவில் பயணிப்போர், அங்கு தங்குவதற்கான அனுமதியுடன், தங்கள் கல்வி தொடர்பான தொழில்துறையில் பணியாற்றவும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பர்மிங்டன் ((Farmington)) என்ற பெயரில் போலியாக பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கி அதில் 600-க்கும் மேற்பட்டோர் பயில்வது போல் மோசடி செய்து  அவர்களுக்கு விசாவும், பணி அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு போலியான பல்கலைக்கழகத்தில் பயில்வதாகக் கூறப்படும் 600 பேர்  சிறை செல்லலாம் அல்லது நாடு கடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்