பாகிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 5.8 ஆக பதிவு

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.8 ஆக பதிவானது.

Update: 2019-02-02 17:16 GMT
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பல இடங்களில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த மக்கள் திறந்தவெளியில் குவிந்தனர்.

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள வடமேற்கு கைபர் பக்துங்க்வா மாகாணம், கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சில மாவட்டங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது 5.8 ரிக்டர் அளவில் பதிவானதாக அங்குள்ள தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்கள் சேதம் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்