பாகிஸ்தான்: முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #NawazSharif

Update: 2019-02-02 17:40 GMT
இஸ்லாமாபாத்,

இரும்பாலை முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு லாகூரில் உள்ள கோட்லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் டாக்டர்கள் குழு நடத்திய பரிசோதனையில்  அவருக்கு இருதயநோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சிறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் அவரது உடல்நிலை சீராகாத காரணத்தால் அவரை உயர்தர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல டாக்டர்கள் குழு பரிந்துரை செய்தது. இதற்கிடையே, நவாஸ் செரீப் சார்பில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவாஸ் செரீப்பின் உடல்நிலை மோசம் அடைந்ததால் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை நவாஸ் செரீப்பின் மகளான மரியம் நவாஸ் உறுதி செய்துள்ளார்.

மேலும் செய்திகள்