உலகைச்சுற்றி...

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு போர்ச்சுக்கல் நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Update: 2019-02-23 22:15 GMT

* ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில், ஒரு மாதமாக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருவதால், மத்திய-மாநில அரசுகளை கலைத்து விட்டு ஓராண்டுக்கு அவசர நிலையை பிறப்பித்து அதிபர் ஒமர் அல்-பஷிர் உத்தரவிட்டார்.

* சீனாவின் தேசிய பாதுகாப்பை பேணும் நோக்கில், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அந்த நாட்டுக்கு உரிமை உண்டு என சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார்.

* ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக இருந்த நிக்கி ஹாலே பதவி விலகியதை தொடர்ந்து புதிய தூதராக கெல்லி கிராப்டை ஜனாதிபதி டிரம்ப் நியமித்து உள்ளார். இவர் தற்போது கனடாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றி வருகிறார்.

* வெனிசூலாவில் அரசியல் நெருக்கடி உச்சக்கட்டத்தை எட்டியிருப்பதால், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன், தனது தென்கொரிய பயணத்தை ரத்து செய்தார்.

* காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு போர்ச்சுக்கல் நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இந்தியாவை தங்கள் நட்பு நாடு என போர்ச்சுக்கல் அரசு கூறியுள்ளது.

* அமெரிக்கா சென்றுள்ள சீன துணை பிரதமர் லியு ஹி, வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் பொருளாதார பேச்சுவார்த்தை மற்றும் இருநாட்டு உறவு பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.


மேலும் செய்திகள்