ஆப்கானிஸ்தான்: தலிபான் தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர்கள் 25 பேர் பலி

ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர்கள் 25 பேர் பலியாயினர்.

Update: 2019-03-01 20:37 GMT
காந்தகார்,

தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாண்ட் பகுதியில் அமெரிக்க-ஆப்கானிஸ்தான் ராணுவ முகாம் மீது பாதுகாப்பு வீரர்களை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்தனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும் என அமெரிக்க தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், தலிபான் அமைப்பு மீண்டும் இந்த  தாக்குதலை நடத்தியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த தாக்குதல் சம்பவத்தில் 25 பாதுகாப்பு படைவீரர்கள் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர். மேலும் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்