உலகைச்சுற்றி...

வங்காளதேசத்தில் உள்ள சவுதி தூதரகத்தில் பணியாற்றி வந்த கலாப் அல் அலி (45) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2019-03-04 22:15 GMT

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தினேஷ் சங்கர் (வயது 41) பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம்இன்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

* வங்காளதேசத்தில் உள்ள சவுதி தூதரகத்தில் பணியாற்றி வந்த கலாப் அல் அலி (45) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட சைபுல் இஸ்லாம் மாமுன் நேற்று முன்தினம் இரவு தூக்கிலிடப்பட்டார்.

* கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நல்லமுறையில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள தலீபான்கள், இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை எனவும் கூறினர்.

* அமெரிக்கா-தென்கொரியா இடையிலான ராணுவ கூட்டுப்பயிற்சியை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் பல மில்லயன் டாலர் சேமிக்கப்படுவதோடு, வடகொரியா உடனான உறவும் மேம்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* ஜெர்மனியில் இருந்து சிரியாவுக்கு தப்பி ஓடி ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பாத வகையில் அவர்களது குடியுரிமை ரத்து செய்ய அந்நாட்டு அரசு யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்