பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி: இங்கிலாந்து ஆடை வடிவமைப்பு நிறுவன தலைமை நிர்வாகி பதவி ராஜினாமா

பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக, இங்கிலாந்து ஆடை வடிவமைப்பு நிறுவன தலைமை நிர்வாகி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Update: 2019-03-05 22:15 GMT
லண்டன்,

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் டெட் பெக்கர். இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ராய் கெல்வின். இவர் கடந்த ஆண்டு பெண்கள் சிலரை அவர்களின் விருப்பம் இன்றி வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ராய் கெல்வின் தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தார்.

இந்த நிலையில் ராய் கெல்வின் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த சில மாதங்களாக நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். அதன் பிறகு நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதுதான் சரியான முடிவு என தீர்மானித்தேன்” என கூறினார்.

மேலும் செய்திகள்