இந்தோனேசியாவில் திருமணமாகாமல் ஓட்டலில் தங்கிய 6 ஜோடிக்கு பிரம்படி தண்டனை

இந்தோனேசியாவில் திருமணமாகாமல் ஓட்டலில் தங்கிய 6 ஜோடிக்கு பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2019-03-05 23:30 GMT
ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் சுமத்ரா மாகாணத்தில் சூதாட்டம், ஓரினச்சேர்க்கை, போதைப் பொருள் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. அதேபோல் திருமணமாகாமல் ஒரு ஆணும், பெண்ணும் தனியாக இருப்பது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு சுமத்ரா மாகாணத்தின் தலைநகர் பந்தா ஏக்கில் உள்ள ஓட்டலில் போலீசார் நடத்திய சோதனையின்போது திருமணமாகாமல் 6 ஜோடிகள் ஒன்றாக தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் அவர்கள் 12 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரம்படி தரவும் உத்தரவிடப்பட்டது. பல மாதங்கள் சிறைவாசத்துக்கு பிறகு அவர்கள் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் 17 முதல் 25 பிரம்படிகள் கொடுக்கப்பட்டன. பெண்கள் வலி தாங்கமுடியாமல் அலறி துடித்தனர். ஆனால் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் இதனை ஆர்வத்தோடு கண்டு களித்ததோடு, சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோ பதிவும் செய்தனர்.

மேலும் செய்திகள்