உலகைச்சுற்றி...

பாகிஸ்தானில் கான்கார்க் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பேசினார்.

Update: 2019-03-30 22:00 GMT

* ஆப்கானிஸ்தானில் ஜாபுல் மாகாணத்தில் ஷார் இ சபா மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் நேற்று தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 போலீசார் பலியாகினர்.

* பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்படுகிற பயங்கரவாதிகள், பயங்கரவாத குழுக்கள் மீது அர்த்தமுள்ள, சோதிக்கத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவும், அமெரிக்காவும் வலியுறுத்தி உள்ளன.

* அரசியல், பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் வெனிசூலாவுக்கு சீனா 65 டன் மருந்து பொருட்களை அனுப்பி, அவை அங்கு போய்ச்சேர்ந்துள்ளன.

* பாகிஸ்தானில் கான்கார்க் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பேசினார். அப்போது அவர் நாட்டின் பணத்தை திருப்பித்தராத வரையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்களை விட்டு வைக்க மாட்டோம். நாட்டின் பணத்தை திருப்பித்தந்தால் விட்டு விடுவோம் என கூறினார்.

* இந்தியாவுடனான முன்னுரிமை வர்த்தக நிலையை கைவிடும் முடிவை, இந்தியாவில் பொதுத்தேர்தல் நடந்து முடியும் வரையில் நிறுத்தி வைக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி. ஜார்ஜ் ஹோல்டிங் வலியுறுத்தி உள்ளார்.

* ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு சிறுவர்களை தேர்ந்தெடுத்து அமர்த்தி வந்த பயங்கரவாத தலைவரை ஷியா போராளிகள் கொன்று விட்டனர்.

மேலும் செய்திகள்