அமெரிக்க பொருட்களுக்கு ‘உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா’ டிரம்ப் சொல்கிறார்

உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா என்று டிரம்ப் பேசினார்.

Update: 2019-04-04 22:45 GMT
வாஷிங்டன்,

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து சாடி வருகிறார்.

இந்த நிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், “இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் (அமெரிக்க பொருட்களுக்கு) உலகிலேயே அதிகம் வரி விதிக்கிற நாடுகளில் ஒன்று. அவர்கள் நமக்கு 100 சதவீத வரி விதித்தார்கள். அவர்களது மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களுக்கு நாம் வரி விதிப்பதில்லை. நாம் நமது ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறோம். ஆனால் அவர்கள் 100 சதவீத வரி விதிக்கிறார்கள். இது சரியல்ல” என கூறினார்.

மேலும் செய்திகள்