இங்கிலாந்து போலீசாரால் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது

இங்கிலாந்து போலீசாரால் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டார்.

Update: 2019-04-11 10:08 GMT
லண்டன்:

அமெரிக்க ராணுவ ரகசியங்களை ‘விக்கிலீக்ஸ்’ இணைய தளத்தில் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (47) வெளியிட்டார். இதனால் விதிக்கப்படும் மரணதண்டனை மற்றும் துன்புறுத்தலுக்கு பயந்து அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலியரான இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று இருந்தார்.  அமெரிக்காவில் இருந்து வெளியேறிய அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நைட்ஸ்பிரிட்ஷ் பகுதியில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 2012-ம் ஆண்டில் அடைக்கலம் புகுந்தார். அவருக்கு ஈகுவேடார் அரசாங்கம் அரசியல் தஞ்சம் அளித்தது. எனவே அங்கு அச்சமின்றி நிம்மதியாக தங்கி இருந்தார்.

அவர் தஞ்சம் அடைந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு ஈகுவேடார் தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கான உத்தரவை அந்நாட்டின் அதிபர் லெனின் மொரெனோ பிறப்பித்தார்.

ஈகுவேடார் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் ஜூலியன் அசாஞ்சேவை லண்டன் மெட்ரோபாலிடன் போலீசார் கைது செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்  வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்  படுத்தப்பட்டடார். இங்கிலாந்து உள்துறை செயலாளர் சாஜித் ஜாவித், அசாஞ்சே காவல்துறையின் காவலில் இருப்பதாக ட்விட்டர் மூலம் உறுதிபடுத்தினார்.

ஈகுவேடார் தூதரகத்தில் 7 ஆண்டுகள் தஞ்சமடைந்ததற்குப் பின், ஜூலியன் அசாஞ்சே இப்போது போலீஸ் காவலில் உள்ளார். இங்கிலாந்தில் சரியான முறையில் நீதிகளை எதிர்கொள்கிறார். நான் ஈகுவேடார்  அதன்  ஒத்துழைப்பிற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள்  இல்லை, என சாஜித் ஜாவித் கூறினார்.

மேலும் செய்திகள்