குரங்குகளுக்கு மனித மரபணுவை செலுத்தி விஞ்ஞானிகள் சோதனை

குரங்குகளுக்கு மனித மரபணுவை செலுத்தி விஞ்ஞானிகள் சோதனை செய்து வருகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

Update: 2019-04-12 12:23 GMT
குன்மிங் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜுவலிஜி  மற்றும் சீன அகாடமி ஆஃப் சயின்சஸ் விஞ்ஞானிகள் வட கரோலினா பல்கலைக்கழகத்தில் அமெரிக்க  ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து எம்சிபிஎச் 1 என்ற ஒரு ஆய்வை நடத்தினர் .

அந்த ஆய்வில் 11 ரீசஸ் குரங்குகளுக்கு மனித மரபணுவை செலுத்தி சோதனை செய்தனர். ரீசஸ் குரங்குகள் கிட்டத்தட்ட மனிதர்களை போன்றே செயல்படக் கூடியவை. இந்த மரபணுவை குரங்குகளுக்கு செலுத்திய பின், மனித மூளை போன்ற வளர்ச்சி அடைய நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் என்பது சோதனை மூலம் தெரியவந்துள்ளது. மரபணு மனித மூளை வளரவும்  மற்றும் முடிவுகளை எடுப்பதற்கும்  உந்துதலாக  உள்ளது என நம்பப்படுகிறது.

மூளை வளர்ச்சியைக் கண்டறிய குரங்குகளுக்கு எம்ஆர்ஐ ஸ்கேனும் செய்து பார்க்கப்பட்டு உள்ளது. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு மனிதர்களைப் போன்றே குரங்குகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

விஞ்ஞானிகள் கட்டுப்பாட்டிலிருந்த குரங்குகளின் மூளை வளர்ச்சியில் நல்ல முன்னேற்றும் இருந்தது. சோதனை முடிவில் 11 குரங்குகளில் 5-க்கு மூளை வளர்ச்சி மனிதர்களுக்கு இணையாக இருந்தது என்று கண்டறிந்து உள்ளனர்.

பெய்ஜிங் சார்ந்த பத்திரிகையில் இந்த  ஆய்வு குறிந்த செய்தி கடந்த மாதங்களில் வெளியானது. மரபணு செலுத்திய குரங்கின் மூளையானது குறுகிய கால நினைவாற்றல் சோதனைகளில் சிறப்பாக செயல்பட்டு உள்ளது.

இந்த ஆய்வு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில் குரங்குகளுக்கு மனித மூளையின் மரபணுவை செலுத்தினால் அவை எங்கு தங்கும், எப்படிச் சிந்திக்கும், என்ன செய்யும், மனிதர்களைத் தாக்கினால் என்ன ஆகும். உடனே இந்த ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்