இலங்கைக்கு பயணிக்க வேண்டாம்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகள் எச்சரிக்கை

மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால் இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Update: 2019-04-26 05:01 GMT
கொழும்பு,

இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் நேற்று மீண்டும் குண்டு வெடித்தது. கொழும்பில் இருந்து 40 கி.மீ. தொலைவில் புகோடா என்ற நகரம் உள்ளது. அங்குள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு பின்னால் உள்ள காலி நிலத்தில் குண்டு வெடித்தது. நல்லவேளையாக, அப்போது அங்கு யாரும் இல்லாததால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த குண்டுவெடிப்பு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால் தங்கள் நாட்டு மக்கள் இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என்று இங்கிலாந்து, ஆஸ்திரேலிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 

மேலும் செய்திகள்