உலகைச் சுற்றி...

* சீன அதிபர் ஜின்பிங் விரைவில் அமெரிக்கா வருவார் என்றும், அவருடனான வர்த்தக பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெறும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-26 22:00 GMT
* வியட்நாம் தலைநகர் ஹனோயில் பிப்ரவரி மாத இறுதியில் நடைபெற்ற வடகொரியா-அமெரிக்கா இடையிலான 2-வது பேச்சுவார்த்தை முறிந்துபோனதற்கு அமெரிக்காவின் அவநம்பிக்கையே காரணம் என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் குற்றம் சாட்டி உள்ளார்.

* ஏமன் நாட்டின் தாயிஸ் பிராந்தியத்தில் உள்ள மோச்சா நகரில் வெடிகுண்டுகள் மற்றும் கண்ணிவெடிகள் அடைத்து வைக்கும் குடோன் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியானார்கள்.

* அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்து பேசினார். அப்போது வருங்காலத்தில் வடகொரியா விவகாரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படும் என தலைவர்கள் இருவரும் உறுதி பூண்டனர்.

மேலும் செய்திகள்