10 லட்சம் விலங்கு மற்றும் தாவர இனங்கள் அழியும் சூழ்நிலை; ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை

உலகில் 10 லட்சம் விலங்கு மற்றும் தாவர இனங்கள் அழிய கூடிய ஆபத்து நிறைந்த சூழல் உள்ளது என ஐ.நா. அமைப்பு எச்சரித்து உள்ளது.

Update: 2019-05-06 11:02 GMT
பாரீஸ்,

ஐ.நா. அமைப்பினை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கொண்ட குழுவினர் உயிரினங்களை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அதன் முடிவுகளை இன்று வெளியிட்டு உள்ளனர்.  இதன்படி, புவியில் கடந்த 1 கோடி ஆண்டுகளில் இல்லாத வகையில், 80 லட்சம் உயிரினங்கள் 10 முதல் 100 மடங்கு வேகமுடன் அழிந்து வருகின்றன என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இயற்கை உலகை மனிதகுலம் அழித்து கொண்டிருக்கிறது.  இதனால் சில தசாப்தங்களில் 10 லட்சம் விலங்கு மற்றும் தாவர இனங்கள் அழிய கூடிய ஆபத்து நிறைந்த சூழல் ஏற்பட்டு உள்ளது என எச்சரித்து உள்ளது.

மேலும் செய்திகள்