எகிப்தில் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிப்பு

எகிப்தில் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2019-05-06 23:30 GMT
கெய்ரோ,

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ அருகே உள்ள கீசா பீடபூமியின் தெற்கு பகுதியில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர். இந்த கல்லறை தோட்டத்தில் அந்த கால மன்னராட்சியில் முக்கிய பொறுப்புகள் வகித்த பெனுய் கா மற்றும் நிவை ஆகிய இருவரின் கல்லறைகள் உள்பட பல்வேறு காலகட்டங்களில் உயிரிழந்தவர்களின் கல்லறைகளும் இடம்பெற்றுள்ளதாக தொல்லியல்துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த பழமையான கல்லறை தோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டிகள், சுண்ணாம்பு கற்களால் செய்யப்பட்ட ஒரே குடும்பத்தின் சிலைகள் மற்றும் விலங்குகள் உருவம் ஆகியவை கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்