உலகைச்சுற்றி...

வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோ உத்தரவின் பேரில் அந்நாட்டின் நாடாளுமன்ற துணை சபாநாயகர் எட்கர் சாம்ப்ரனோவை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-10 22:00 GMT

* இந்தியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகியும், நடிகையுமான தியா மிர்சா, சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மா உள்பட உலகின் முக்கிய பிரமுகர்கள் 17 பேரை, ஐ.நா.வின் எஸ்.டி.சி. அமைப்புக்கான ஆலோசகர்களாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார்.

* இங்கிலாந்து தலைநகர் லண்டனின் கிழக்கு பகுதியில் இல்போர்டு நகரில் உள்ள 7 கிங்ஸ் மசூதியில், நேற்று முஸ்லிம்கள் ரமலான் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது முகமூடி அணிந்து வந்த மர்ம நபர், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடினான். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை.

* வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோ உத்தரவின் பேரில் அந்நாட்டின் நாடாளுமன்ற துணை சபாநாயகர் எட்கர் சாம்ப்ரனோவை போலீசார் கைது செய்தனர். அவரை உடனடியாக விடுவிக்கும்படி அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெனிசூலா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

* அமெரிக்க மக்களுக்கோ அல்லது அமெரிக்க நலன்களுக்கோ தீங்கு விளைவிக்கும் வகையில் ஈரான் எந்த வித நடவடிக்கை எடுத்தாலும், கடுமையான மற்றும் வேகமான பதிலடியை தர தயாராக இருப்பதாக ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

* இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெல்லிங்டன் வீதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகே வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். போலீசாரின் விசாரணையில் அவர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த முகமது நதீமுதின் என தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அரசு ஆதரவு படை, தங்கள் படையில் சேர்ப்பதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகளை பிடித்து வைத்திருந்தனர். அவர்களில் 106 சிறுமிகள் உள்பட 894 பேரை இப்போது விடுவித்தது விட்டனர்.

மேலும் செய்திகள்