தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை

இங்கிலாந்தில் வாழும் இந்திய தம்பதிகள் தேனிலவுக்காக இலங்கை சென்ற இடத்தில் புதுப்பெண் உயிரிழந்ததால், அவரது கணவர் திரும்பிச்செல்ல தடை விதிக்கப்பட்டது.

Update: 2019-05-11 20:18 GMT
லண்டன்,

இங்கிலாந்தில் உள்ள வடமேற்கு லண்டனில் வசித்துவருபவர் கிலான் சந்தாரியா (வயது 33). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் கடந்த மாதம் 19-ந் தேதி உஷெய்லா பட்டேல் (31) என்பவரை திருமணம் செய்தார். 4 நாட்கள் கழித்து இவர்கள் தேனிலவுக்காக இலங்கை புறப்பட்டு சென்றனர். அங்குள்ள காலே என்ற இடத்தில் ஒரு கடற்கரை விடுதியில் தங்கினார்கள். அப்போது அவர்கள் சாப்பிட்ட உணவு விஷமானதாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் காய்ச்சல் மற்றும் ரத்தவாந்தி ஏற்பட்டது. உடனே அவர்கள் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு உஷெய்லா பட்டேல் சிகிச்சை பலனின்றி இறந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அதிகமாக வாந்தி எடுத்ததால் நீர்சத்து குறைந்து மரணம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை முடியும் வரை கிலான் சந்தாரியா லண்டன் திரும்ப தடை விதித்துள்ளனர்.

மேலும் செய்திகள்