பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருதான நிசான் இசுதீன் விருதினை மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது வழங்கினார்.

Update: 2019-06-08 13:49 GMT
மாலத்தீவு,

2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார்.
அவருக்கு விமானநிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளிநாட்டு தலைவர்களுக்கு மாலத்தீவு அளிக்கும் மிக உயரிய விருதான நிசான் இசுதீன் விருதினை இந்திய பிரதமர் நரேந்திர  மோடிக்கு அளிக்கப்படும் என்றார். இதனையடுத்து  பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது வழங்கப்பட்டது. வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான  நிசான் இசுதீன் விருதை அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் முகம்மது வழங்கினார்.

அதே நேரம், மாலத்தீவில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு உதவுமாறு மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் முகம்மது கோரிக்கை வைத்திருந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் கையெழுத்திட்டு தந்த பேட்டை மாலத்தீவு அதிபருக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். மேலும், மாலத்தீவின் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கவும் இந்தியா உதவ உள்ளது.

மாலத்தீவில் புதிய முதலீடுகளை செய்யவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடியின் பயணம் அமைய இருக்கிறது. கடந்த பதவி காலத்தில் பிரதமர் மோடி செல்லாத அண்டை நாடுகளின் பட்டியலில் மாலத்தீவு இருந்தது. தற்போது முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத்தீவுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்