மோடி - இம்ரான் கான் சந்திப்பு, பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே, மோடி - இம்ரான் கான் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Update: 2019-06-15 02:16 GMT
பிஷ்கேக்,

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள உலக நாட்டு தலைவர்கள், உச்சி மாநாட்டின் போது ஒரே இடத்தில் கூடினர். அப்போது, பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒரே இடத்தில் இருந்தனர்.  இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதோடு, மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்காக மோடிக்கு இம்ரான் கான் வாழ்த்துக்களை தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

ஷாங்காய் மாநாட்டின் போது, மோடியுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக கைவிடாதவரை, பேச்சு நடத்தப்பட வாய்ப்பு இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

மேலும் செய்திகள்