8 ஆண்டுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடிக்கும்

அடுத்த 8 ஆண்டுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என ஐநா தெரிவித்துள்ளது.

Update: 2019-06-18 06:16 GMT
ஜெனிவா,

ஐ.நா.சபை வெளியிட்டுள்ள உலக மக்கள் தொகை - 2019 என்ற அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை தற்போது 770 கோடியாக உள்ளது. வரும் 2050ஆம் ஆண்டில் இந்த தொகை 970 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், 2019 மற்றும் 2050ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சீனாவில் மக்கள்தொகை 3 கோடி அளவில் குறையும் என கூறப்படுகிறது. ஆனால், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் மக்கள் தொகை உயர்வு வழக்கம்போலவே இருக்கும். இதனால் உலக மக்கள் தொகையில் பாதியளவு  இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தோப்பியா, தான்சானியா, இந்தோனேஷியா. எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் இருக்கும் என தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த 8 ஆண்டுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக ஆப்பிரிக்காவில் தற்போதுள்ள மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்