ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில், கருணைக்கொலைக்கு சட்டப்பூர்வமான அங்கிகாரம் வழங்கப்பட்டது.

Update: 2019-06-19 19:29 GMT
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தீராத நோய் மற்றும் தாங்க முடியாத வலி போன்றவற்றால் அவதிப்படுபவர்களை கருணைக்கொலை செய்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டம் அங்கு நேற்று அமலுக்கு வந்தது. இதன் மூலம் தீராத நோயால் பாதிக்கப்பட்டு 6 மாதங்களுக்கும் குறைவாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள், நரம்புதிசு செயலிழப்பு போன்ற நோய்களால் தங்கமுடியாத வலியை அனுபவிப்பவர்களை கருணைக்கொலை செய்ய மருத்துவர்களை அணுகலாம்.

விக்டோரியா மாகாண தலைவர் ஆன்ட்ரூஸ் இதுபற்றி கூறுகையில், “பல்வேறு கட்ட ஆலோசனை மற்றும் தீவிர விசாரணைக்கு பிறகு கருணை அடிப்படையிலான இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கருணைக்கொலை செய்வதற்காக இதுவரை 120 டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.

மேலும் செய்திகள்